திணறும் வாழ்க்கை
வலுவிழந்து
தடம் மாறி
ஒதுங்கி நிற்கிறது
வாழ்க்கை.
சீரார்ந்த
செழிப்பெல்லாம்
நீர் காணா பயிரென
உருவழிந்து நிற்கிறது.
கிஞ்சித்தும்
எட்டித்தொட
முடியாமல்
திணறுகிறது
யாவும்.
மொழியிழந்து
விழிபிதுங்கி
ஓலமிடும்
உள்ளத்திற்கு
ஒப்பாரியே
ஆறுதல்.
காரணமின்றி
நடுங்கும் இதயம்
கொதிப்பேறும்
குருதி
ஓயாமல் வழியும்
கண்ணீரென
சிதிலமடைந்து
புரையோடி
உறுத்துகிறது நாளும்.
நம்பிக்கைகள்
யாவும்
கண்காண
உருகியோடும்
மேகமென்றாயிற்று.
அவதூறு
வழக்கமாயிற்று.
அவமானத்தின்
அடர்த்திக் கூடி
கணந்தோறும்
கெட்டியாகிறது.
புளிப்பேறி
முடைவீசும்
கோலத்தில்
வெளிப்பூச்சுகள்
வாடிக்கையாயிற்று.
No comments:
Post a Comment